Monday, August 5, 2019

ஈரோடு சிறுகதைகள் முகாம் நிகழ்ச்சி நிரல்



நாள் 1 (10-8-2019 சனி  )   :

1. 10 to 11 am:
புதுமைப்பித்தனில் துவங்கிய தமிழ் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்குகள் -ஜெயமோகன்
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/07/blog-post_45.html

           11 to 11.30 am    தேநீர் இடைவேளை 

2. 11.30 to 12.30 pm:
எதார்த்த வாழ்வில் இருந்து நவீன வாழ்வுக்குள் நுழைந்த தமிழ் சிறுகதைகளில் நவீனத்துவம் - தேவிபாரதி
2000  கு பின் தமிழ் சிறுகதைகள் - சுனில் கிருஷ்ணன் 
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/08/blog-post_5.html

            1.30 to 3 pm மதிய உணவு இடைவேளை

4. 3 to 4 pm:
தமிழ் சிறுகதைகள் மீது மொழியாக்க  சிறுகதைகளின் தாக்கம் - மோகனரங்கன்
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/08/blog-post_4.html
        
         4 to 4.30 pm  தேநீர் இடைவேளை

5. 4.30 to 5.30 pm:
தீவிர சிறுகதைகளும் பகடி சிறுகதைகளும் - சாம்ராஜ் 
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/08/blog-post_86.html
          
      5.30 to 7.30 pm   மாலை நடை

6. 7.30 to 8.30 pm:
புலம்பெயர்ந்த தமிழ் சிறுகதைகள் -சுனில் கிருஷ்ணன்
கதை சொல்லல் - சாம்ராஜ்
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/08/blog-post_86.html

              9 pm   இரவுணவு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாள்  2 (11-8-2019 ஞாயிறு)  :

8. 9 to 10 am:
மாறிவரும் மனித இருப்பில் தமிழ் சிறுகதைகளின் மாற்றத்திற்கான தேவை- விஷால் ராஜா
சிறுகதைகளில் மறைபிரதி மற்றும் குறிப்புணர்தல்- எம். கோபாலகிருஷ்ணன்
          11 to 11.30 am   தேநீர் இடைவேளை

10. 11.30 to 12.30 pm:
தற்கால ஆங்கில சிறுகதைகள்- கோவை நரேன்
காண்க: https://erodeshortstorymeet.blogspot.com/2019/08/blog-post_8.html


11. 12.30 to 1.30 pm:
அனைத்து எழுத்தாளர்கள் பங்கேற்கும் கேள்வி பதில் நேரம்

               
1.30 pm மதிய உணவும் நிறைவும் 

--------------------------------------------------------------------------------------------------------------------------

கவிஞர் சாம்ராஜ் அனுப்பிய குறிப்பும் கதைகளும்


அரங்கு 1: தீவிர சிறுகதைகளும் பகடி சிறுகதைகளும்

     தமிழில் இலக்கிய உலகத்தில் பொதுவான ஒரு நம்பிக்கை உண்டு. அதை மூட நம்பிக்கை என்றும் கொள்ளலாம். தீவிரம் மாத்திரமே உண்மையான உணர்ச்சி மற்றவைகளெல்லாம் அதனுடைய பணிப்பெண்களே என்ற திடமான அபிப்ராயம் உண்டு. இலக்கியம் எப்பொழுதும் TMT கம்பிகள் போல உணர்ச்சிகளில் முறுக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அதுவே கலை என்பது பெரும்பான்மையான அபிப்ராயம். தீவிரத்துக்கு நிகராக பகடிக்கும் இடமுண்டு தீவிரம் நிகழ்த்தும் எல்லா வினையாற்றல்களையும் பகடியும்  நிகழ்த்தும் சமயத்தில் தீவிரத்தை பகடி விஞ்சி போகும். பகடி என்பது அத்தனை புனிதங்களையும் கேள்விக்குள்ளாக்குவது ஒழுங்குகளை கலைத்து போடுவது, அபத்தங்களின் காலணி அணிந்து ஓடுவது. ஒரு வகையில் உலகம் பகடியின் வழிதான் ஆறுதல் அடைகிறது. துல்லியமாய் சொன்னால் இந்த மேல் கீழ் உலகத்தில் வாழ்வதற்கான ஆற்றலை பெறுகிறது.

தீவிர சிறுகதை:
பரபாஸ் - ஷோபா சக்தி
https://drive.google.com/open?id=1LJC5C1UTGeAX9bQ9cY-qqaOY2RFqC77k

பகடி சிறுகதை:

நாற்காலி - கி ராஜநாராயணன்

கூடுதலாக வாசிக்க
  கண்டி வீரன் – ஷோபா சக்தி
  அப்படி ஒரு காலம் அப்படி ஒரு பிறவி – ஜி.நாகராஜன்
  நகர் நீங்கிய காலம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  குதிரை – அஸ்வகோஷ்
  தரைக்காடு – அழகிய பெரியவன்
  காவடி ஆட்டம் – யூமா வாசுகி
  ஜார் ஒழிக – சாம்ராஜ்
  குரல்கள் – ஜெயமோகன்
  மிச்சம் – வண்ணதாசன்

அரங்கு 2: கதை சொல்லல்

பொதுவாக  வாய் மொழிக்கதைகளில் நம்ப முடியாத மீ யதார்த்தம் உண்டு. தமிழில் மாய யதார்த்தவாத கதைகள் எழுதுபவர்கள் இந்த மீ யதார்த்த கதைகளை வாசித்தால்/ வாசித்திருந்தால் அவர்களின் கதை உலகமே வேறொன்றாக மாறுவதற்கு சாத்தியம் உண்டு. இந்த வாய்மொழி கதைகளுக்கு உலகளாவிய ஒற்றுமையும் உண்டு. தொன்மையான சமுகங்களில் நிலவும் வாய்மொழி கதைகளின் ஆதார உணர்ச்சி ஒன்றே.  

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அனுப்பிய குறிப்பு


அரங்கு 1: தமிழ் சிறுகதைகள் 2000க்கு பின் 

தமிழ் புனைவுலகில் கணினிப் பயன்பாடும்,இணையப் பயன்பாடும் அதிவேகமாக பரவிய காலகட்டம் இது. உலக இலக்கியங்களை கைசொடுக்கும் தொலைவில் கொணர்ந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு வாசிப்பு ஜனனாயகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சாதகங்களே சவால்களாகவும் ஆனது. தோராயமாக நூறு சிறுகதை ஆசிரியர்களாவது இந்த இரு பத்தாண்டுகளில் அறிமுகம் ஆகி உள்ளார்கள். குறைந்தது முப்பது பேராவது நம் கவனத்துற்குரியவர்கள். ஏதோ ஒரு வகையில் இவர்கள் புதுமைப்பித்தனின், அழகிரிசாமியின், ஜானகிராமனின், அசோகமித்திரனின், சுந்தர ராமசாமியின் நீட்சியே. மற்றொரு வகையில் உலகமயமாக்கள், தொழில்நுட்பமயமாதல் வழியாக அவர்களில் இருந்து விலகிய வேறு வாழ்வனுபவங்களை பெற்றவர்கள். ஒட்டுமொத்த இருபத்தாண்டு சிறுகதை சூழலில் நிகழ்ந்திருக்கும் போக்குகளை பறவைக்கோணத்தில் அறிமுகம் செய்வதே இந்த அமர்வின் நோக்கம். அதனூடாக சமகாலச்சிறுகதைகளின் சிக்கல்களையும் எல்லைகளையுமா அதன் மீறல்களையும் பொது அம்சங்களையும் தொட்டுக்காட்ட முனைகிறது.

ஜங்க் - பாலசுப்ரமணியம் பொன்ராஜ்

சுக்கிலம் - குணா கந்தசாமி

அரங்கு 2: தமிழகத்திற்கு அப்பால் தமிழ் சிறுகதை வெளி

ஈழம், சிங்கப்பூர், மலேசிய பிரதேசங்களில் தமிழ் நவீன இலக்கியத்திற்கு இணையாக ஒரு வளர்ச்சி போக்கை காண முடிகிறது. முற்காலத்தில் பசியும் பஞ்சமும் தமிழர்களை கடல் தாண்டி கரை சேர்த்தது. அங்கே தங்கள் பண்பாட்டை இறுக பற்றி பிரித்து வந்த தாய்நிலத்தின் மீதின ஏக்கம் படைப்புகளுக்கான உந்து விசையாகிறது. வந்தடைந்த ஊரில் காலூன்றுவது அடுத்த சவால். ஈழப்போர் தமிழர்களை ஜரோப்பாவிற்கும், ஆஸ்த்திரேலியாவிற்கும், வட அமெரிக்காவிற்கும் அகதிகளாக வெளியேற்றிறது. மூன்றாவது கட்டமாக தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்புகள் தமிழர்களை உலகம் முழுக்க கொண்டு சென்றது. புதிய பண்பாட்டுடன் உராய்தல் மற்றும் பொருத்திக் கொள்ளுதல் முக்கிய பேசு பொருளாகியது. இந்த தளத்தில் உள்ள சவால்கள் சிக்கல்கள் பற்றியதே இவ்வமர்வு.

வோண்டர் கோன் - யதார்த்தன்
https://drive.google.com/open?id=11pLq8Ny5OVVLS6qeyYK38CSSXgXO0WK3

சீன லட்சுமியின் வரிசை - கனகலதா (சிங்கப்பூர்)
https://drive.google.com/open?id=12njUZY0KXuB_-Pi-eNL_xZmghZOwU5nA

கோவை நரேன் அனுப்பிய குறிப்பு



ஈரோடு சிறுகதை முகாமில் சமகால ஆங்கில சிறுகதைகள் என்ற அமர்வில் பின்வரும் நான்கு இளம் படைப்பாளிகளை முன்வைத்து ஒரு சிற்றுரை வழங்கலாம் என்று இருக்கிறேன். ஆங்கில சிறுகதைகள் என்ற விரிவான தளத்திற்குள் புகாமல், புலம் பெயர்ந்த இளம் படைப்பாளிகளின் நேரடி ஆங்கில படைப்புகள் சமகால இலக்கியத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை மட்டும் கவனத்தில் கொள்ளலாம். இக்கதைகளை முன்வைத்து அதை சுட்டிக் காட்டமுடியும் என்று நினைக்கிறேன். 

1. Yiyun Li
அலெக்ஸ்சாண்டிரா க்லிமெனையம் சேர்த்து வாசிக்கலாம். இவர்களின் கதைகளுக்கு ஒரு இணை புள்ளி இருக்கிறது.

2.  Dina Nayeri

3. Viet Thaan Nguyen

4. Ken Liu