Monday, August 5, 2019

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அனுப்பிய குறிப்பு


அரங்கு 1: தமிழ் சிறுகதைகள் 2000க்கு பின் 

தமிழ் புனைவுலகில் கணினிப் பயன்பாடும்,இணையப் பயன்பாடும் அதிவேகமாக பரவிய காலகட்டம் இது. உலக இலக்கியங்களை கைசொடுக்கும் தொலைவில் கொணர்ந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு வாசிப்பு ஜனனாயகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சாதகங்களே சவால்களாகவும் ஆனது. தோராயமாக நூறு சிறுகதை ஆசிரியர்களாவது இந்த இரு பத்தாண்டுகளில் அறிமுகம் ஆகி உள்ளார்கள். குறைந்தது முப்பது பேராவது நம் கவனத்துற்குரியவர்கள். ஏதோ ஒரு வகையில் இவர்கள் புதுமைப்பித்தனின், அழகிரிசாமியின், ஜானகிராமனின், அசோகமித்திரனின், சுந்தர ராமசாமியின் நீட்சியே. மற்றொரு வகையில் உலகமயமாக்கள், தொழில்நுட்பமயமாதல் வழியாக அவர்களில் இருந்து விலகிய வேறு வாழ்வனுபவங்களை பெற்றவர்கள். ஒட்டுமொத்த இருபத்தாண்டு சிறுகதை சூழலில் நிகழ்ந்திருக்கும் போக்குகளை பறவைக்கோணத்தில் அறிமுகம் செய்வதே இந்த அமர்வின் நோக்கம். அதனூடாக சமகாலச்சிறுகதைகளின் சிக்கல்களையும் எல்லைகளையுமா அதன் மீறல்களையும் பொது அம்சங்களையும் தொட்டுக்காட்ட முனைகிறது.

ஜங்க் - பாலசுப்ரமணியம் பொன்ராஜ்

சுக்கிலம் - குணா கந்தசாமி

அரங்கு 2: தமிழகத்திற்கு அப்பால் தமிழ் சிறுகதை வெளி

ஈழம், சிங்கப்பூர், மலேசிய பிரதேசங்களில் தமிழ் நவீன இலக்கியத்திற்கு இணையாக ஒரு வளர்ச்சி போக்கை காண முடிகிறது. முற்காலத்தில் பசியும் பஞ்சமும் தமிழர்களை கடல் தாண்டி கரை சேர்த்தது. அங்கே தங்கள் பண்பாட்டை இறுக பற்றி பிரித்து வந்த தாய்நிலத்தின் மீதின ஏக்கம் படைப்புகளுக்கான உந்து விசையாகிறது. வந்தடைந்த ஊரில் காலூன்றுவது அடுத்த சவால். ஈழப்போர் தமிழர்களை ஜரோப்பாவிற்கும், ஆஸ்த்திரேலியாவிற்கும், வட அமெரிக்காவிற்கும் அகதிகளாக வெளியேற்றிறது. மூன்றாவது கட்டமாக தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்புகள் தமிழர்களை உலகம் முழுக்க கொண்டு சென்றது. புதிய பண்பாட்டுடன் உராய்தல் மற்றும் பொருத்திக் கொள்ளுதல் முக்கிய பேசு பொருளாகியது. இந்த தளத்தில் உள்ள சவால்கள் சிக்கல்கள் பற்றியதே இவ்வமர்வு.

வோண்டர் கோன் - யதார்த்தன்
https://drive.google.com/open?id=11pLq8Ny5OVVLS6qeyYK38CSSXgXO0WK3

சீன லட்சுமியின் வரிசை - கனகலதா (சிங்கப்பூர்)
https://drive.google.com/open?id=12njUZY0KXuB_-Pi-eNL_xZmghZOwU5nA

No comments:

Post a Comment