Monday, August 5, 2019

கவிஞர் சாம்ராஜ் அனுப்பிய குறிப்பும் கதைகளும்


அரங்கு 1: தீவிர சிறுகதைகளும் பகடி சிறுகதைகளும்

     தமிழில் இலக்கிய உலகத்தில் பொதுவான ஒரு நம்பிக்கை உண்டு. அதை மூட நம்பிக்கை என்றும் கொள்ளலாம். தீவிரம் மாத்திரமே உண்மையான உணர்ச்சி மற்றவைகளெல்லாம் அதனுடைய பணிப்பெண்களே என்ற திடமான அபிப்ராயம் உண்டு. இலக்கியம் எப்பொழுதும் TMT கம்பிகள் போல உணர்ச்சிகளில் முறுக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று அதுவே கலை என்பது பெரும்பான்மையான அபிப்ராயம். தீவிரத்துக்கு நிகராக பகடிக்கும் இடமுண்டு தீவிரம் நிகழ்த்தும் எல்லா வினையாற்றல்களையும் பகடியும்  நிகழ்த்தும் சமயத்தில் தீவிரத்தை பகடி விஞ்சி போகும். பகடி என்பது அத்தனை புனிதங்களையும் கேள்விக்குள்ளாக்குவது ஒழுங்குகளை கலைத்து போடுவது, அபத்தங்களின் காலணி அணிந்து ஓடுவது. ஒரு வகையில் உலகம் பகடியின் வழிதான் ஆறுதல் அடைகிறது. துல்லியமாய் சொன்னால் இந்த மேல் கீழ் உலகத்தில் வாழ்வதற்கான ஆற்றலை பெறுகிறது.

தீவிர சிறுகதை:
பரபாஸ் - ஷோபா சக்தி
https://drive.google.com/open?id=1LJC5C1UTGeAX9bQ9cY-qqaOY2RFqC77k

பகடி சிறுகதை:

நாற்காலி - கி ராஜநாராயணன்

கூடுதலாக வாசிக்க
  கண்டி வீரன் – ஷோபா சக்தி
  அப்படி ஒரு காலம் அப்படி ஒரு பிறவி – ஜி.நாகராஜன்
  நகர் நீங்கிய காலம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  குதிரை – அஸ்வகோஷ்
  தரைக்காடு – அழகிய பெரியவன்
  காவடி ஆட்டம் – யூமா வாசுகி
  ஜார் ஒழிக – சாம்ராஜ்
  குரல்கள் – ஜெயமோகன்
  மிச்சம் – வண்ணதாசன்

அரங்கு 2: கதை சொல்லல்

பொதுவாக  வாய் மொழிக்கதைகளில் நம்ப முடியாத மீ யதார்த்தம் உண்டு. தமிழில் மாய யதார்த்தவாத கதைகள் எழுதுபவர்கள் இந்த மீ யதார்த்த கதைகளை வாசித்தால்/ வாசித்திருந்தால் அவர்களின் கதை உலகமே வேறொன்றாக மாறுவதற்கு சாத்தியம் உண்டு. இந்த வாய்மொழி கதைகளுக்கு உலகளாவிய ஒற்றுமையும் உண்டு. தொன்மையான சமுகங்களில் நிலவும் வாய்மொழி கதைகளின் ஆதார உணர்ச்சி ஒன்றே.  

No comments:

Post a Comment