Friday, August 2, 2019

எழுத்தாளர் விஷால்ராஜா அனுப்பிய குறிப்பு


அரங்கில் பின் வரும் விஷயங்களை எல்லாம் தொட்டு பேசலாம் என நினைக்கிறேன். இவை தோராயமான குறிப்புகள் மட்டும். மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.
மனிதமைய நோக்கில் இருந்து தமிழ் சிறுகதைகள் எப்படி விலகி வந்திருக்கின்றன என்பது குறித்த சிறு விளக்கம். ஜெயமோகன், எஸ்.ரா, ரமேஷ் பிரேம் முதலியோரின் எழுத்துக்களை உதாரணமாக சொல்ல இருக்கிறேன். இரண்டாயிரத்துக்கு பிறகு வந்த சிறுகதை தொகுப்புகள் சிலவற்றை முன்வைத்து அவற்றிலுள்ள பொது அம்சங்கள் –விளிம்பு நிலை மக்கள், காமம், வன்முறை- பற்றிய பார்வை. எஸ்.செந்தில்குமார், ஜீ.முருகன், ஜே.பி.சாணக்யா முதலியோரின் கதைகளை குறிப்பிட எண்ணியுள்ளேன். ஷோபா சக்தியையும் சேர்க்க வேண்டும்.
சிறுகதைகளின் தேக்க நிலை மீதான என் தனிப்பட்ட பார்வை. இலக்கியத்தில் கருத்தியல்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கம்.
இணைய இதழ்களின் வருகைக்கு பின் தமிழ் சிறுகதைகள். முழுமையான ஆய்வோ அலசலோ அல்ல. மாறாக பாகேஸ்ரீயின் தொகுப்புக்கு எழுதிய விமர்சனத்தின் வழியே ஒரு குறிப்பிட்ட தனி போக்கை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
சிறுகதை எழுத்தாளனாக நான் இன்றைய சவால்கள் என கருதக்கூடியவை. இந்த வடிவ மாற்றங்களினூடே மாறாமல் இருக்கும் ஒன்றை இழக்க நேரும் அபாயம் குறித்த ஒரு எச்சரிக்கை.

நான் பரிந்துரைக்கும் சிறுகதை:

No comments:

Post a Comment